Monday, April 9, 2007

மொழி

இப்படி ஒரு படம் கடந்த சில வருடங்களில் பார்த்ததில்லை என்றே சொல்லலாம். படம் முழுவதும் அப்படியொரு இழையோடும் நகைச்சுவை. பிரகாஷ்ராஜ் எல்லா வேஷத்திலும் வெளுத்து வாங்குகிறார். இதில் காமெடி அவருக்கு கை கொடுத்து இருக்கிறது.

பிருத்திவிராஜ் (மலையாள நடிகர்), பிரகாஷ்ராஜ் இருவரும் சினிமாவில் பின்னணி இசை உதவியாளர்கள். ஒரு apartment-க்கு குடி வருகின்றார்கள். அங்கு ஜோதிகாவை பிருத்வி சந்தித்து பேச முயற்சிக்கிறான். பிறகு அவள் பிறவி ஊமை - காது கேட்காது என்பதை தெரிந்தும் காதலிக்கிறான். முயற்சி கடைசியில் வெற்றியடைகிறது.

பிரம்மானந்தம்(தெலுங்கு நகைச்சுவை நடிகர்), பிரகாஷ்ராஜ் வரும் காட்சிகள் சிரிப்பலையுடனே நகர்கிறது. பாஸ்கரும் ஸ்வர்ணமால்யாவும் தத்தமது பாத்திரத்தினை பாங்குடனே செய்திருக்கின்றனர். எல்லா பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது.வெகு நாட்கள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு:



Source : http://babousrini.blogspot.com/2007/04/blog-post.html

No comments: